ஜெயலலிதாவை முன்னிலைப் படுத்தாததே தோல்விக்கு காரணம்! சசிகலா ஆதங்கம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தேர்தலில் முன்னிலை படுத்தாததே காரனம் என சசிகலா பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிக்லாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பொன்னமராவதியைச் சேர்ந்த பாரதிராஜ என்பவரோடு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனைகளை கூறவில்லை. விளம்பரங்களின் அம்மாவின் புகைப்படமே இல்லை. அவரை முன்னிலை படுத்தாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அமமுக பிரிந்திருக்க கூடாது. எல்லோரும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இவர்களே வெற்றியை தூக்கிக் கொடுத்தது போல இருந்தது. எனக் கூறியுள்ளார்.