1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (23:48 IST)

புனித் ராஜ்குமாரின்'' ஜேம்ஸ்'' படம் இன்று ரிலீஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரபல கன்னட நடிகரான மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் இன்று வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறக்கும் முன்னதாக,   நடிக்ர்  புனித் ராஜ்குமார்,சேட்டன் குமார் இயக்கத்தில் “ஜேம்ஸ்” என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்திற்கு சரண்ராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று திரையங்குகளில் வெளியாகிபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  புனித் ராஜ்குமாருக்குப் பதில் இப்படத்தில் அவரது அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வசூல் ரீதியாக சாதனை படக்க்கும் எனக் கூறப்படுகிறது.