ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (18:38 IST)

குண்டர் சட்டத்தில் பாஜக கல்யாணராமன்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாஜக பிரமுகர் கல்யாணராமன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத மோதலை உருவாக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் கல்யாண ராமனுக்கு தற்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது