1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2023 (09:23 IST)

காங்கிரஸ் நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முதல்வர் சென்றால்... அண்ணாமலை எச்சரிக்கை..!

தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சியை நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலின் சென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூரில் நடைபெற்ற பாஜக அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் அண்ணாமலை பேசிய போது இந்த எச்சரிக்கையை அவர் எடுத்தார். 
 
பெங்களூரில் இம்மாதம் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வாறு புறக்கணித்தால் பாஜக அவருடன் இருக்கும் என்றும் தெரிவித்தார் 
 
ஆனால் அந்த கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டால் கோட்டை முற்றுகையிடப்படும் என்றும் கூறியுள்ளார் 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த எச்சரிக்கைக்கு திமுக தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran