1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (18:45 IST)

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்; ஆளுனருக்கு முதல்வர் பதில் கடிதம்..!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பார் என ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை தான் விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் நேற்று இரவு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில் இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று குறிப்பிட்டுள்ளார் 
 
செந்தில் பாலாஜி இளாக இல்லாத அமைச்சராக நீடிபபதில் தனக்கு விருப்பமில்லை என்றும் எனது அறிவுரையை மீறி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார் என்ற ஆளுநரின் கடிதத்திற்கு முதலமைச்சரின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva