1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai says about senthil balaji dismiss

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் வாபஸ் பெறப்படவில்ல்லை: அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை என்றும்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தமிழக கவர்னர் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவர் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார்,.
 
 இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெற்றதாக கவர்னர் கூறவில்லை என்றும் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதுகாப்பது ஏன் என்ற கேள்வி எழும் அவர் எழுப்பியுள்ளார். 
 
மேலும் அமைச்சரவையை முதலமைச்சர் முக ஸ்டாலின் சரியாக கையாளவில்லை என்றும் ஒரு அமைச்சருக்காக முதலமைச்சர் வரம்பு மீறி செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
’மாமன்னன்’ சுத்த ப்ளாப் படம், திமுகவினர் மட்டுமே பார்க்கின்றனர்.. ஜெயக்குமார்