செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (11:28 IST)

அண்ணாமலை vs அதிமுக.. போஸ்டர் போரால் பரபரப்பு..!

கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது தொண்டர்கள் மத்தியில் போஸ்டர் போர் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அண்ணாமலையை எச்சரிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆர்பி உதயகுமார் குறித்து தவறாக பேசினால் அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்ன எச்சரிக்கிறோம் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மதுரை மேற்கு மாவட்ட பாஜகவினர், ‘கூழை கும்பிடு போட்ட ஆர்பி உதயகுமார் எங்கள் தன்மான தலைவரை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அரசியலுக்கு வருமுன் ரேஷன் அரிசி கடத்தியது நினைவில்லையா?  நீங்கள் அமைச்சராக இருந்தபோது பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடத்திற்கு இலவசமாக வழங்க வேண்டிய டிவியில் செய்த ஊழல் நினைவில்லையா? திமுகவுடன் வைத்திருக்கும் கள்ள உறவை நிரூபிக்க வேண்டுமா? ஊழல் பெருச்சாளியே, எங்கள் ஊரை விட்டு ஓடிப் போய்விடு. ஐந்து ரூபாய் பிஸ்கட் சோப்பு டப்பா உதயகுமார் ஊழல்கள் மேலும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை மற்றும் அதிமுக இடையே போஸ்டர் போர் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran