1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பிரதமரை கேலி செய்து குழந்தைகள் நிகழ்ச்சி: தமிழ் சேனல் மீது நடவடிக்கையா?

பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசு குறித்தும் கேலிசெய்து குழந்தைகள் நிகழ்ச்சி நடத்திய தமிழ் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல தமிழ் சேனல் ஒன்றில் புலிகேசி மன்னர் போன்றும் மங்குனி அமைச்சர் போன்றும் வேடமிட்ட இரண்டு குழந்தைகள் பிரதமர் மோடி குறித்தும் இந்தியா குறித்தும் தரக்குறைவாக பேசிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது 
 
இந்த நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அந்த சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை தயாரித்த அனைவரையும் வேலையை விட்டு நீக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது