வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (08:46 IST)

ஊரடங்கை மீறி டீ பார்ட்டி; கடுப்பான மக்கள்! – மன்னிப்பு கேட்ட பிரதமர்!

இங்கிலாந்தில் ஊரடங்கு சமயத்தில் தேநீர் விருந்து நடத்தியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020 முதலாக பரவி வரும் நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. 2020ல் இங்கிலாந்திலும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்த சமயம் தனது அலுவலக கார்டனில் தேநீர் விருந்து நடத்தியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அவரது இந்த செயலுக்கு அவரது கட்சியினரே முகம் சுளித்த நிலையில் பொதுமக்களிடையேயும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

இந்நிலையில் தற்போது அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் பொதுமக்களிடையேயும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் அவர் பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள் கூறி வருகின்றன,.