ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (08:03 IST)

அண்ணாமலை பல்கலை பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்!

அண்ணாமலை பல்கலை பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ பயிற்சி மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்துவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில மாதங்களாகவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ பயிற்சி மாணவர்கள் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வில்லை என போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் இன்று காலை திடீரென போராட்டத்தில் இறங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 8 மாதங்களாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.