வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (11:31 IST)

பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்ன என்பதை எங்களை பார்த்து உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: அண்ணாமலை

annamalai
உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில் இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்ன என்பதை பாஜகவினரை பார்த்து உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பு 40 நிமிடம் நடந்ததாகவும் அதில் 38 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து கேள்விகளும் நட்பு முறையில் கேட்கப்பட்ட கேள்வி என்றும்  அண்ணாமலை தெரிவித்தார். ஒரு கேள்வி கூட தமிழகத்தின் அக்கறை குறித்து நலன் குறித்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பார்த்து  பல்லு படாமல் பக்குவமா பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிராமத்தில் கூறுவதைப் போல் அந்த கேள்வியும் பதிலும் இருந்தது என்றும் அந்த பேட்டி குறித்து பேசி எங்களை நாங்களே தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் உதயநிதி என்ன பதில் கூறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி

Edited by Mahendran