வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (12:38 IST)

தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம்: அண்ணாமலை பேட்டி..!

தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொத்து பட்டியலை வெளியிட்டபோது அதில் டிஆர் பாலு மற்றும் அவரது மகன் சொத்து பட்டியலையும் குறிப்பிட்டு இருந்தார்
 
இதனை அடுத்து டிஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அண்ணாமலை ஆஜர் ஆனார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் அண்ணாமலை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இதனை அடுத்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது என்றும் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran