செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (18:57 IST)

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
மிகவும் புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அம்சமான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 
 
இன்று காலை 7:30 மணிக்கு திருத்தேர் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக
சென்று மீண்டும் தேரடியை வந்து அடைந்தது. இந்த தேர் செல்லும்போது கோவிந்தா கோவிந்தா என்று ஏராளமான பக்தர்கள் கோஷமிட்டு வழிபட்டனர்.
 
Edited by Mahendran