வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (07:33 IST)

நோட்டீசுக்கு பதில் இல்லை, அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு: டி.ஆர். பாலு பேட்டி..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் இல்லை என்பதால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திமுக சார்பில் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஒரு சில நோட்டீசுகளுக்கு அண்ணாமலை பதவியில் அளித்திருந்தாலும் டி ஆர் பாலு நோட்டீசுக்கு அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய அவதூறு நோட்டீஸ்க்கு பதில் இல்லை என்றும் எனவே அண்ணாமலை மீது வரும் எட்டாம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என்றும் திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva