ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (08:13 IST)

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

Rahul Gandhi
இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக குற்றம் காட்டியது. மேலும் அவர் பேசிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் என்பவர் வெளியிட்ட அறிக்கையில் தன்னை இந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை வெறுப்பவர்கள், பொய் பேசுபவர்கள் என ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை ராகுல் காந்தி இழிவுபடுத்தி உள்ளார்.

உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் போர் செய்யாத, தன் மதத்திற்கு தீங்கு செய்தவர்களுக்கு கூட நன்மை செய்யக்கூடிய மதம் சனாதன இந்து தர்மம் என்றும் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி இந்துக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva