1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (20:13 IST)

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று அரசியல் குறித்த மேல் படிப்பு படிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் மேல்நாட்டில் நல்லபடியாக படித்து விட்டு வரட்டும் என்றும் ஆனால் அவர் நன்றாக படிப்பாரா என்பது எனக்கு தெரியாது என்றும் கூறினார்.

மேலும் மேல்நாட்டில் படிக்கச் செல்லும் அவர் மறைந்த தலைவர்களை பற்றி அவதூறாக பேசக்கூடாது என்பதை படித்துவிட்டு வரட்டும் என்று அல்லது மோடி , அமித்ஷா, நட்டா ஆகியோர்களாவது அவருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அண்ணாமலை மேல் படிப்புக்கு செல்வதை நான் வரவேற்கிறேன் என்றும் அவர் திரும்பி வந்து நாகரீகமான அரசியல் செய்யட்டும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.



Edited by Siva