புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (14:31 IST)

மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும்: அண்ணாமலை

மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்ற உடன் அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் கர்நாடக மாநில மக்களின் நன்மைக்காக மேகதாது அணையை கட்டியை தருவேன் என்று தெரிவித்தார். 
 
இதற்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்டப்படுவது எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார். 
 
கர்நாடகாவுக்கு சென்று மேகதாது அணைக்கு எதிராக நான் பேசினேன் என்றும் மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்க போவதில்லை என்று என்னிடம் டி கே சிவக்குமார் கூறியபோதிலும் மேகதாது அணை கட்டப்படுவது எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆனால் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் இடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.
 

Edited by Mahendran