ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 31 மே 2023 (17:07 IST)

மேகதாது அணை விவகாரத்தில் உலக நீதிமன்றத்திற்கும் செல்லவும் தயார்: கே எஸ் அழகிரி

மேகதாது அணை விவகாரத்தில் உலக நீதிமன்றம் செல்லவும் தயார் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் மேகதாது அணையை கட்டியே தீர்வேன் என்று கூறியிருப்பது தமிழக கர்நாடகா மாநிலங்களை இடையே நட்புறவை சிதைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
டி கே சிவக்குமாரின் அறிவிப்புக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இது குறித்து கூறிய போது மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலனுக்கு இடையூறு ஏற்பட்டால் உலக நீதிமன்றத்திற்கும் செல்ல தயார் என  தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்ற நிலையில் அவர் ராகுல் காந்தியிடம் கூறி சமாதானம் செய்தாலே போதும் எதற்கு உலக நீதிமன்றம் செல்ல வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
 
Edited by Mahendran