செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (10:24 IST)

கர்நாடகாவை அடுத்து ராஜஸ்தானிலும் இலவச அறிவிப்புகள்: காங்கிரஸ் அதிரடி..!

Ashok Gelot
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு இலவச அறிவிப்புகள் வெளியாகி தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கும் இலவச அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. 
 
கர்நாடக மாநிலத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000, பெண்களுக்கு இலவச பேருந்து உள்பட பல்வேறு இலவச அறிவிப்புகள் வெளியானது. இதனை அடுத்து அங்கு காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தற்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலார்ட் இலவசம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் அவர் கர்நாடக மாநிலத்தில் அறிவித்த சில இலவச அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran