உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்: மேகதாது விவகாரம் குறித்து ராமதாஸ்..!
கர்நாடக மாநில அரசு மேகதாது அணையை கட்ட முடிவு செய்திருப்பதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே இந்த அறிவிப்புக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இது குறித்து டாக்டர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் காவேரி ஆற்றில் மேகதாது அணையை கட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டு இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். வேகம் எடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியை காக்க வேண்டும்.
தேவைப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Edited by Mahendran