வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (17:22 IST)

கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது: அமர்பிரசாத் ரெட்டி கண்டனம்!

ama prasad
கூட்டணி கட்சி ஆக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவில் இருந்து நேற்று திடீரென விலகிய நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
 
இந்த நிலையில் நிர்மல் குமார் எங்கிருந்தாலும் வாழ்க என அண்ணாமலை வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருடைய ஆதரவாளர் அமல் பிரசாத் ரேட்டி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
Edited by Siva