1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai says about ED officer arrest

கைதான அமலாக்கத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை தேவை: அண்ணாமலை

அமலாக்கத்துறை
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் கைதான அமலாக்கத்துடைய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் விமான நிலையத்தில் தெரிவித்த அண்ணாமலை அதே நேரத்தில் ஒரு மனிதன் தவறு செய்வதை வைத்து ஒரு துறையை தவறு சொல்லக்கூடாது என்றும் அவருக்கு தெரிவித்தார்.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரி கைதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில்  மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதாகவும் விடிய விடிய அந்த அலுவலகத்தில் சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சி.ஆர்.பி.எப் படையினரை தமிழக காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் அதிகரிப்பு.. ஏழைகளுக்கு இனி எட்டாக்கனியா?