வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:32 IST)

8 வழிச்சாலை வேணும்னு நான் சொல்லவே இல்ல! – அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம்!

எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு!
சமீபத்தில் 8 வழிச்சாலை அவசியம் என அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ஏ.வ.வேலு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் – சென்னை இடையே 8 வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பது குறித்து கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்துவது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, 8 வழிச்சாலை வரவே கூடாது என திமுக கூறவில்லை என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ள அமைச்சர் ஏ.வ.வேலு “8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என்று நான் எங்கும் பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது 8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள பிரச்சினைகளை சரி செய்யதான் கூறினார். போக்குவரத்து அதிகரிக்கும்போது சாலைகளை விரிவுப்படுத்திதான் ஆக வேண்டும். முந்தைய அதிமுக அரசு விவசாயிகளை அழைத்து பேசவேண்டும் என்றுதான் கூறினோம்” என கூறியுள்ளார்.