1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:20 IST)

மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை..!

மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை..!
மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மதுரை ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு  தமிழக பாஜக  சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran