வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:00 IST)

அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது: அமைச்சர் உதயநிதி

அண்ணாமலை கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
 நீட் தேர்வு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தமிழகம் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று என்றும் கட்சி பேதம் இன்றி இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
திமுக அதிமுக பாமக என பிரிந்து போராடுவதை விட அனைவரும் ஒன்று சேர்ந்து இதை மக்கள் போராட்டமாக ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தமிழக மாணவர்களின் நலன் மட்டுமே குறிக்கோள் என்ற எண்ணத்தில் போராடினால் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார் 
 
அப்போது செய்தியாளர்  அண்ணாமலையின் கருத்து ஒன்றை கேள்வி கேட்டபோது அண்ணாமலைக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று அங்கிருந்து அவர் சென்று விட்டார்.
 
Edited by Siva