1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:52 IST)

பாஜகவில் அடுத்த தலைவருக்கான தேர்வு நடக்கிறதா?

Annamalai
தமிழக  பாஜக   நிர்வாகிகள் சமீபத்தில் அதிக சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.

தமிழக பாஜக  மாநில தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய தலைவர்  நட்டாவால் நியமிக்கப்பட்டார்.

அதன் பின் சட்டமன்றத் தேர்தலிலும் கோவை உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில், பாஜக பேய் மாதிரி வளர்கிறது என்று கூறிய   நிலையில், எதிர்க்கட்சி தலைவர் போல் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாடுகள் முன்வைத்து கட்சிதலைமையின் நம்பிக்கையைப் பெற்றார்.

ஆனால், சமீப காலமாக பாஜக உட்கட்சிக்கும் பிரச்சனை காரணமாக  நடிகை காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா உள்ளிட்ட  நிர்வாகிகளை கட்சியை விட்டு  இடை நீக்கம் செய்துள்ளார்.

இந்த  நிலையில்,  சீனியர் நிர்வாகிகளுடன் மோதல் போக்கு, கட்சி நிர்வாகிகள் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது உள்ளிட்ட காரணங்களால், பாராளுமன்ற தேர்தலையொட்டி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது.

ஆனால், அண்ணாமலை இப்பதவிக்கு வந்தது முதல் பாஜக வளர்ச்சியடைந்துள்ளதால் அவரே தலைவராக  நீடிப்பார் என்ற தகவலும் வெளியாகிறது.

Edited By Sinoj