ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (14:28 IST)

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகல்!

surya siva
திருச்சி சூர்யா  பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி  திருச்சி சூர்யாவுக்கும், பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து, டெய்சிக்கு மிரட்டல் விடுத்த திருச்சி சூர்யாவை , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .


அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் .

இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Edited by Sinoj