1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (15:54 IST)

இபிஎஸ்க்கும் - வேலுமணிக்கும் உட்கட்சி பூசல்.! அதிமுகவை நிராகரித்த மக்கள்.! அண்ணாமலை காட்டம்..!!

Annamalai
அதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எஸ்.பி வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போன்று தோன்றுகிறது என்றும்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் பாஜக இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான் என்றார். மேலும் தனியாக நின்று வெல்ல முடியாதவர்கள் கூட்டணியில் இருந்திருந்தால் மட்டும் எப்படி வெல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
 
கோவையில் அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் இருந்தும் ஏன் வெற்றி பெற வில்லை என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள் என்று விமர்சித்தார். அதிமுக தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடும் என்றும் பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து வேலுமணி தவறான தகவலை தந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் திமுகவினர்  ஆட்டை கொடூரமாக வெட்டி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக குறிப்பிட்ட அண்ணாமலை,  திமுகவினருக்கு என் மீது கோபம் இருந்தால் ஆட்டை வெட்ட வேண்டாம், என் மீது கை வையுங்கள் என்று கூறினார்.


மேலும் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் 2026 இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.