1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2025 (13:58 IST)

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

annamalai Mk stalin
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு வேண்டுமென்றே குறைபாடுகளுடன் சமர்ப்பித்ததால்தான் மத்திய அரசு நிராகரித்தது என்று பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனுப்பிய முழுமையான கடிதத்தை வெளியிட்ட அவர், தி.மு.க. அரசே நிராகரிக்கப்படுவதற்காக திட்ட அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, மத்திய அரசை குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.
 
கோவையில்  போதுமான சாலை அகலம் இல்லாதது, பயண நேரத்தை கணிசமாக குறைக்காதது, பயணிகளின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது மற்றும் மூன்று ஆண்டு காலக்கெடு நடைமுறைக்கு ஒவ்வாதது.
 
மதுரையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 20 லட்சத்திற்கு குறைவாக இருப்பதால், மெட்ரோவிற்கு பதிலாக பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு பொருத்தமானது.
 
தி.மு.க. அரசியல் ஆதாயத்திற்காக தொழில்நுட்ப ரீதியாக பலவீனமான திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. எனவே, DPR-களை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்
 
 
Edited by Siva