தொடர்புடைய செய்திகள்
- இன்றும் விலை உயர்ந்த தங்கம்!
- இது தமிழ்நாடு. ஒருபோதும் பிஜேபியின் கனவு நினைவாகாது: ஜோதிமணி எம்பி டுவிட்
- நீட் தாக்கம் வழக்கில் மேல்முறையீடு செய்ய போகிறேனா? கரு நாகராஜன் தகவல்
- இரட்டைவேட பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் உயர்நீதிமன்றம் நெத்தியடி தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்
- பதவியேற்றவுடன் திண்டுக்கல் ஐ லியோனி செய்த முதல் வேலை!
பதவிக்கு வயது அவசியமில்லை - அதிருப்தி குறித்து அண்ணாமலை பேட்டி!
பாஜக கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பு என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவி வகித்து வந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து எல்.முருகன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, பாஜக கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியமான விஷயம் கிடையாது.
கட்சியில் இல. கணேசன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள், மற்றொருபுறம் பல பேரால் தாக்கப்பட்ட நரேந்திரன் போன்றவர்களும் இருக்கிறார்கள். எனவே இது தனிமனித கட்சி கிடையாது என தெரிவித்துள்ளார்.
