1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (18:04 IST)

பதவியேற்றவுடன் திண்டுக்கல் ஐ லியோனி செய்த முதல் வேலை!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்றுக்கொண்டார் என்பது தெரிந்தது அவருக்கு திமுகவினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பதவியேற்ற உடன் முதல் முறையாக அவர் தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகம் சென்று அங்கு உள்ள புத்தக சேமிப்பு இடங்களை பார்வையிட்டார். அவருடன் மேனேஜிங் டைரக்டர் மணிகண்டன் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுகுறித்து திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கீழ் இயங்கும் அடையார் புத்தக சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டேன்.மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் IAS உடனிருந்தார். நடைபெறும் பணிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்
 
திண்டுக்கல் ஐ லியோனி இந்த பதவியை ஏற்பதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதும் எதிர்ப்பையும் மீறி அவர் தற்போது பதவி ஏற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது