திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (11:22 IST)

3வது அலை அறிக்கை ஒன்றும் வானிலை அறிக்கை இல்லை...

கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் .வி.கே.பால் எச்சரிக்கை. 

 
ஜூலை 4 ஆம் தேதியே கொரோனா 3வது அலை சில மாநிலங்களில் பரவ தொடங்கிவிட்டதாக  ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் விபின் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். கடந்த 463 நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த தரவுகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், கொரோனா 3வது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் என்று கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் .வி.கே.பால் தெரிவித்துள்ளார்.