திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2020 (12:15 IST)

கொரோனா வார்டாகும் பல்கலைகழக விடுதி: மாணவர்கள் வெளியேற்றம்!

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அண்ணா பல்கலைகழக விடுதியை கொரோனா வார்டாக மாற்றம் பல்கலைகழக நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த சென்னை அண்ணா பல்கலைகழக மாணவர் விடுதிகளை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது, ஆனால் இதற்கு பல்கலைகழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பல்கலைகழக விடுதிகளை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ள அண்ணா பல்கலைகழக நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சியிடம் விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக அளிக்க உள்ள நிலையில் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.