நாளுக்கு நாள் விலை உயரும் பெட்ரோல்: இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் வருவாயை உயர்த்து நோக்கில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மே 4 முதல் அமலுக்கு வந்த இந்த வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் உயர்ந்து 82.58 ரூபாய்க்கும், டீசல் விலை 51 காசுகள் உயர்ந்து 75.80 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது. கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை 7.04 ரூபாயும், டீசல் 7.58 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.