1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (08:48 IST)

தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்: அண்ணா பல்கலை அறிவிப்பு

University
தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து கூறிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் நோட்டீஸில் கண்ட குறைகளை இரண்டு வாரங்களில் சரி செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறு சரி செய்ய தவறினால் கல்லூரிகளின் பெயர்,  தரமற்ற கல்லூரிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டு பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரி தரமற்று உள்ளதாக கூறப்படும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது