புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (18:54 IST)

அண்ணா பல்கலையில் பகவத் கீதை: துணைவேந்தர் சூரப்பா விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பாடங்கள் அறிமுக செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது
 
 
இந்த அறிவிப்புக்கு எதிர்பார்த்தபடியே அரசியல் கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 
 
 
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகம் செய்யப்படுவது குறித்து துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். இதன்படி பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் பாடங்கள் விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும், இந்த பாடன்களை விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் விருப்பப்பாடமாக கூட தத்துவியல் பாடம் இருக்கக்கூடாது என்று அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.