கனமழை எதிரொலி: அண்ணா சாலை பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பழங்கால கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்து கொண்டிருக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சென்னை ராஜாஜி சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரிட்டிஷார் காலத்து கட்டிடம் இடிந்தது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள மதரசா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதூ. நல்லவேளையாக இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் எந்தவித சேதமும் இல்லை
சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்த மதரசா மேல்நிலைப் பள்ளியின் கட்டடம் 180 ஆண்டுகள் பழமையானது என்றும், இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பலகீனமாக இருப்பது குறித்து ஏற்கனவே மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் இந்த பள்ளியில் ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.