1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (16:13 IST)

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

Anbumani
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படும் என்பதும் அன்றைய தினம் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. 
 
இந்த நிலையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
உலகின் ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான் - 
அவர்களின் சேவை போற்றப்பட வேண்டும்:  வாழ்த்துச் செய்தி
 
தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  அன்னைக்கு அடுத்தபடியாக  உன்னத சேவை செய்பவர்கள் மருத்துவர்கள் தான். உலகின் ஆக்கும் சக்தி இறைவன் என்றால், அவன் படைத்த மனிதர்களை எந்த கிருமியும் தாக்காமல் காப்பவர்கள்  மருத்துவர்கள் தான். 
 
அதனால் அவர்கள் தான் காக்கும் சக்திகள்.  தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  மருத்துவர்களின் இணையற்ற பணியை போற்றவும், அங்கீகரிக்கவும் அரசும் சமுகமும் முன்வர வேண்டும்.
 
 
Edited by Mahendran