1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: புதன், 14 செப்டம்பர் 2022 (21:44 IST)

காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யம்: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

Anbumani
காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், கூடுதல் அதிகாரம் வேண்டும், 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட 11அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பு சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளது!
 
ஜனநாயகத்தின் வேரான உள்ளாட்சிகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுப்பெறும். அப்போது தான் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய முடியும்.  இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!