1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anbumani ramadas said dmk will have only single digit

NDA-வுக்கு 200 தொகுதி!. திமுகவுக்கு சிங்கிள் டிஜிட்!.. ஜோசியம் சொல்லும் அன்புமணி!..

anbumani ramadoss
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறது. அந்த கட்சியில் அதிமுக மட்டும் இல்லாமல் அன்புமணி ராமதாஸின் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் இணைந்திருக்கிறது.

பாமகவை பொறுத்தவரை அந்த கட்சியை இப்போது இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது.. ஒன்று அன்புமணி தலைமையிலான பாமக, மற்றொன்று ராமதாஸ் தலைமையிலான பாமக. இதில் மாம்பழம் சின்னம் அன்புமணிக்கே சொந்தம் 2021 ஆகஸ்ட் மாதம் வரை அவர்தான் பாமகவின் தலைவர் என நேற்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இளைஞர் அணி பொதுக்குழுவில் பேசிய அன்புமணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக ஒற்றை இலக்கத்தி மட்டுமே வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். மேலும், பாமகவில் பல துரோகிகள் இருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானவர் ஜி.கே.மணி என கூறியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தூய்மை பணியாளர்கள் இனி விசில் ஊதக்கூடாது.. தி.மு.க. கவுன்சிலர் உத்தரவு.. அந்த பயம் இருக்கணும்..