1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (20:26 IST)

பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?

modi anbumani
பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?
பிரதமர் மோடியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார் 
 
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக இருந்தாலும் இந்த சந்திப்பின் போது சில முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது
 
பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி பதவி ஏற்ற பின்னர் பிரதமரை சந்தித்து இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறியிருப்பதாவது:
 
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று நான் சந்தித்த போது, பாமக தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். 
 
கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல்  உள்ளிட்ட கோரிக்கைகளை நான் முன்வைத்தேன்