இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!

Last Updated: வியாழன், 21 ஜூன் 2018 (21:11 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இத்தனை நாள் பெயர் வைக்காத படம் ஒன்றில் நடித்து வந்தார். இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 
 
இப்படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ஃப்ர்ஸ்ட் லுக்கில் மிகவும் இளமையாகவும், ஸ்டைலிஷ்யாகவும் வாயில் சிக்ரெட்டோடு காணப்படுகிறார். 
 
இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள் என்று கூறியுள்ளார்.
 
அதோடு, புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற வாசகத்தையும் அவர் ஹேஷ்டேகாக பயன்படுத்தியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :