திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (15:42 IST)

அரசியலுக்கு வந்தால் அண்ணா ; இல்லையேல் பெரியார் : தெறிக்கும் விஜய் போஸ்டர்

நடிகர் விஜய் தொடர்பாக அவரின் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

 
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்ட நடிகர் அரசியலுக்கு தொடரும் வந்து கொண்டிருக்கும் நிலையில், விஷாலுக்கு முன்பே அரசியலுக்கு வருவதாய் முன்னிறுத்தப்பட்டவர் நடிகர் விஜய். ஆனால், திரைப்படத்தில் மட்டும் நடித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார். 
 
ஆனால், இவரின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவது போல பல வருடங்களாக போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. ‘நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா! அரசியலுக்கு வராவிட்டால் தந்தை பெரியார்!’ என்ற வாசகத்துடன், அண்ணா, பெரியார், விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
 
ஒரே நேரத்தில் பெரியாராகவும், அறிஞர் அண்ணாவாகவும் வாழும் நபர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது எத்தனை பெரிய தவம்? என இந்த புகைப்படத்தை பலரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.