வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (18:33 IST)

நோட்டாவுக்குதான் ஓட்டு போட்டேன்... அதுக்கு என்ன? ஆனந்த் ராஜ் காட்டம்!

அன்புமணிக்கு எம்பி சீட் கொடுக்க கூடாது என நடிகர் ஆன்ந்த ராஜ் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நடிகர் ஆனந்த் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு... தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா ஆகிய அனைத்து கட்சிகளுக்கும் வாழ்த்துக்கள். நான் நோட்டாவுக்கு தான் வாக்களித்தேன். 
 
மத்திய அரசு தமிழகத்தை சேர்ந்த திட்டங்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆர்கே நகர் பொருத்தவரை அது வந்த வெற்றியல்ல தந்த வெற்றி. 
என்னுடைய அரசியல் பயணம் குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் முடிவெடுப்பேன். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பலவீனமாகத்தான் உள்ளது. 
 
குறிப்பாக சொல்கிறேன் என்னுடைய பணிவான வேண்டுகோள், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கோ அல்லது பாமகவை சேர்ந்தவர்களுக்கும் ராஜ்யசபா பதவியை கண்டிப்பாக கொடுக்கக் கூடாது என வெளிப்படையாக தெரிவித்தார்.