ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (15:56 IST)

பிரபல நடிகரின் டுவிட்டர் பதிவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11ல் தொடங்கி, மே 19ல் முடிவடைந்தது. இதன் மக்கள் தீர்ப்பு என்னும் வாக்கு எண்ணிக்கை கடந்த 23 ஆம்தேதி நடைபெற்றது. அதில் இந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 தொகுதியிலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 352  இடங்களில் வென்றாலும்  தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.  37 தொகுதியில் திமுக கூட்டணியும், 1 தொகுதியில் அதிமுகவும் வென்றது.
இதனால் தமிழக பாஜவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகம், திராவிடம்  உள்ள பெரியார் மண் என்றும் இங்கே பாஜகவின் தாமரை ஒருபோதும் மலராது என்று திராவிட தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
 
மேலும் தமிழாட்டுக்கு மத்திரி சபையில் பிரதிநிதித்துவம் தராமல் செய்துவிட்டதாகவும், இதனால் தமிழகத்துக்கு மத்திய அரசின் திடங்களை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படும் சிக்கல் ஏற்படும் என்று பலரும் கூறிவருகின்றனர்
 
இந்நிலையில் நடிகர் எஸ் வி சேகர் தனது டுவிட்டர் பக்கதில், ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ஒருவர் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளூம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
மேலும் இதுதான் தமிழ் மண்ணா என்று பதிவிட்டு தேர்தல் முடிவை கேலி செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிஷன்கள் பலரும் தங்கள் கருத்துக்களைக் கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.