செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (18:38 IST)

படுகொலை செய்யப்பட்ட உதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி ராணி !

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் படுகொலை செய்யப்பட்ட தனது உதவியாளரின் உடலை சுமந்து  இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்தார் ஸ்மிருதி ராணி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது சொந்த தொகுதியான அமேதியில் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார் ஸ்மிருதி ராணி. ஆனால் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அமேதி தொகுதியில் ஸ்மிருதிக்கு உதவியாளராக இருந்த சுரேந்தர் சிங் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

பரௌலியா கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான சுரேந்திரா சிங், அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் ஸ்மிருதி ராணி வெற்றி பெற்று மூன்று நாட்களுக்குள் சுரேந்தர் சிங் மர்மநபர்களால் அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்மிருதி ராணி அவரது பிணத்தை சுமந்து சென்றார். சுரேந்தர் சிங்கின் கொலை குறித்த விசாரணையை உத்தர பிரதேசப் போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.