செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (07:30 IST)

கொங்கு நாட்டு முதல்வர் ஈஸ்வரன்: சுவர் விளம்பரத்தால் சர்ச்சை

கொங்கு நாட்டு முதல்வர் ஈஸ்வரன்: சுவர் விளம்பரத்தால் சர்ச்சை
தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற தனி யூனியன் பிரதேசம் தொடங்க வேண்டும் என்ற குரல் கடந்த சில நாட்களாக எழுந்து வரும் நிலையில் திடீரென கொங்குநாட்டு முதல்வர் ஈஸ்வரன் என சுவர் விளம்பரம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொங்கு நாட்டு முதல்வரே என கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு அவரது கட்சியினர் பட்டம் சூட்டி சுவர் விளம்பரம் செய்துள்ளனர். கோவையை பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையை போற்றும் வகையில் சங்ககிரி என்ற பகுதியில் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது, இந்த நிகழ்ச்சிக்கு சுவர் விளம்பரம் எழுதிவரும் கொங்கு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள் கொங்குநாட்டு முதல்வரே என ஈஸ்வரனுக்கு பட்டான் சூட்டியுள்ளனர்
 
ஏற்கனவே தமிழகத்தின் கொங்கு நாடு என்ற சொல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சுவர் விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது