செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (08:00 IST)

ஒன்றிய அரசு என்று கூறினால் கொங்குநாடு என்று சொல்வோம்: யாதவ் மகாசபை தலைவர்

ஒன்றிய அரசு என்று கூறினால் கொங்குநாடு என்று சொல்வோம்: யாதவ் மகாசபை தலைவர்
திமுக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் திராவிடநாடு, ஒன்றிய அரசு, தனி தமிழ்நாடு என்று பிரிவினையின் உள்நோக்கத்துடன் பேசினால் கொங்குநாடு என்ற கோரிக்கையை எழுப்புவோம் என்று யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் என்பவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒன்றிய அரசு என்று சொல்வதன் நோக்கம் தவறானது என்றும் திமுக மாநில சுயாட்சி என்பதன் நோக்கம் வேறு என்றும் திமுக நிறுவனர் அண்ணாவே சாத்தியமற்றது என்று கைவிட்டதை தற்போது இவர்கள் திரும்ப ஆரம்பிக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியை தாண்டிவிட்டது என்றும் இது 10 கோடியாக அதிகரித்தால் வருங்காலத்தில் தமிழகத்தில் இரு மாநிலங்களாகப் இருக்கும் பிரிக்கும்  சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
கொங்கு நாடு என்ற கோரிக்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் திராவிடநாடு, ஒன்றிய அரசு, தனி தமிழ்நாடு என்று அவர்கள் பேசினால் நாங்களும் கொங்கு நாடு என்று பேசுவோம் என்றும் கொங்கு நாடு என்று சொல்வதில் தவறு இல்லை என்றும் திராவிட நாடு என்று சொல்லும் வரை நாங்கள் கொங்குநாடு என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்