1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வியாழன், 25 மே 2023 (12:22 IST)

பால் கொள்முதலில் அமுல் நிறுவனம்.. அமித்ஷாவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்..!

தமிழகத்தில் ஏற்கனவே பால் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
 
அமுல் நிறுவனத்திடம் ஆவின் விழுந்து விடக்கூடாது என்றும் போட்டியை சமாளிக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி உள்பட பல அரசியல்வாதிகள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் அமல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் பால் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் அமல் நிறுவனத்தின் நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் மேலும் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran