கமல்ஹாசன் பரிந்துரை புத்தகங்கள் விற்பனை! – சென்னை புத்தக விழா தேதி அறிவிப்பு!
கோரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சென்னை புத்தக திருவிழா பிப்ரவரி 24ல் தொடங்குவதாக பபாசி அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரியில் சென்னையில் புத்தக திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதத்தில் புத்தக திருவிழாவை நடத்த பபாசி முயற்சிகளை மேற்கொண்டது.
அதன்படி பிப்ரவரி 24 முதல் சென்னை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. பிப்ரவரி 24 தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை 14 நாட்கள் இந்த புத்தக திருவிழா நடைபெறும். இந்த விழாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.
மேலும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டிகள், பேச்சு போட்டிகள் உள்ளிட்டவற்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.